விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்பட டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள்...

‘ரத்தம்’ திரைப்படத்தின் டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2022-12-03 22:39 IST
விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பட டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள்...

சென்னை,

'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய சி.எஸ்.அமுதன், மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வரும் 5-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் முன்னனி இயக்குனர்களான வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் 'ரத்தம்' திரைப்பட டீசரில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 

Tags:    

மேலும் செய்திகள்