நடிகை வரலட்சுமி நடிக்கும் 'சபரி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை வரலட்சுமி நடிக்கும் 'சபரி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-04-17 15:43 IST
நடிகை வரலட்சுமி நடிக்கும் சபரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,

நடிகை வரலட்சுமி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'சபரி'. இப்படத்தை அறிமுக இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கியுள்ளார். மஹா மூவீசுக்காக மகேந்திர நாத் கொண்ட்லா 'சபரி' படத்தைத் தயாரித்துள்ளார். மகரிஷி கொண்ட்லா படத்தை வழங்குகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

 

இப்படத்தில் வரலட்சுமி, கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் வரலட்சுமி அசத்தியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இத்திரைப்படம் மே 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்