வாழை திரைப்படம் : என் சிறுகதையில் உள்ள அனைத்தும் அப்படியே உள்ளது எழுத்தாளர் சோ. தர்மன்

10 ஆண்டுகளுக்கு முன்பே வாழை திரைப்படத்தின் கதையை எழுத்தாளர் சோ. தர்மன் சிறுகதையாக எழுதியுள்ளார்.

Update: 2024-08-29 08:20 GMT

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தநிலையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் வாழை திரைப்படம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் வாழை திரைப்படத்தின் கதையை சிறுகதையாக 'வாழையடி...' என்ற தலைப்பில் எழுதி விட்டேன். இது என்னுடைய 'நீர்ப் பழி' என்ற சிறுகதை கதை தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது. நான் எழுதிய இந்த கதையை நினைத்து தற்போது மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் என்னுடைய கதையை திருடிவிட்டார் என்று கூறவில்லை. அவர் படிக்காமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் இருவரும் கூறியுள்ள கருத்து ஒன்று தான். நான் அச்சு ஊடகத்தில் எழுதியதை மாரி செல்வராஜ் தற்போது சினிமாவில் எடுத்திருக்கிறார். ஆனால் ஊடகம் மட்டுமே வேறு என்று கூறியுள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்