"கிவி பழதுண்டுகளால் ஆன மேலாடையுடன் உர்பி ஜாவித்" ருசித்துப் பார்க்க நமக்கு அதிர்ஷ்டமில்லை ரசிகர்கள் கமெண்ட்
உகாதி பண்டிகை நாளில், அனைவரும் பாரம்பரிய உடையில் ஜொலிக்கிறார்கள், ஆனால் உர்பி மட்டும் கிவி பழத்தால் தனது உடலை மறைத்ததற்காக பலரால் டிரோல் செய்யப்படுகிறார்.;
மும்பை
உர்பி ஜாவித் தனது அரை குறை ஆடைகளால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவித் ஒரு டிரெண்டிங் டிசைனராக உள்ளார். உர்பி ஜாவித் ஒரு நடிகை மற்றும் மாடல் மட்டுமல்ல, ராப் பாடகரும் கூட. உர்பிக்கு மற்றொரு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலமாக உர்பி ஜாவித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கத்ரீனா கைப், அஜய் தேவ்கன், ராம் சரண், கஜோல் மற்றும் ஆலியா பட் போன்ற பிரபலங்களுடன் உர்பி ஜாவித் இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளார். உலகளவில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 100 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் நடிகை இடம்பெற்றுள்ளார்.
தற்போது கிவி பழ ரவிக்கையில் உர்பி ஜாவித் காட்சி அளிக்கிறார். இந்த விலை உயர்ந்த பழத்தை ருசிக்கும் அதிர்ஷ்டம் நமக்கு இல்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
உகாதி பண்டிகை நாளில், அனைவரும் பாரம்பரிய உடையில் ஜொலிக்கிறார்கள், ஆனால் உர்பி மட்டும் கிவி பழத்தால் தனது உடலை மறைத்ததற்காக பலரால் டிரோல் செய்யப்படுகிறார்.
உர்பி ஜாவேத் மிகவும் விலையுயர்ந்த பழங்களில் ஒன்றான கிவி பழத்தை சாப்பிட்டு கொண்டே. அதே பழத்தாலான மேலாடையை அணிந்து கேமராவுக்கு போஸ் கொடுத்தார்.
'நான் அணிந்திருக்கும் இந்த மேலாடையின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது சொல்லுங்கள்? என உர்பி ரசிகர்களை கேட்டு உள்ளார். அதற்கு ரசிகர்கள் பலவேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
நான் ஒரு முழுமையான சைவ உணவு உண்பவன், அதனால் இந்த உடை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று ஒருவர் கூறி உள்ளார். 'இவ்வளவு விலையுயர்ந்த பழத்தை ருசிக்கும் ஆடம்பரம் எங்களிடம் இல்லை, அதை ஏன் வீணாக்க வேண்டும்?' என ஒருவர் கூறி உள்ளார்
உர்பி ஜாவித் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர் உண்ணும் பொருட்களுடன் இப்படி நடந்துகொள்வது சரியல்ல என்று மற்றொருவர் கூறி உள்ளார்.