கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா...! உர்பி ஜாவேத் -சன்னி லியோன் இணைந்து போஸ்
கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா...! உர்பி ஜாவேத் -சன்னி லியோன் இணைந்து போஸ் கொடுத்தனர் அந்த வீடியோ வைரலாகி உள்ளது.;
மும்பை
பாலிவுட்டின் நடிகையும் முன்னாள் ஆபாச பட நடிகையுமான சன்னி லியோன் மற்றும் அரை குறை ஆடைகளால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் உர்பி ஜாவித் இருவரும் ஒன்றாக தோன்றி அசத்தினார்கள்.
சமீபத்தில் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி இருவரும் போட்டோகிராபர்கள் கேமராவுக்கு தாராளமாக போஸ் கொடுத்தனர். இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். சன்னியும், உர்பியும் ஒன்றாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சன்னி லியோன் வெள்ளை நிற கவுனில் வந்தார். உர்பி ஜாவித் வழக்கம் போல் வினோதமான உடையில் வந்தார்.உர்பி விலா எலும்பைப் போன்ற உடை அணிந்து கவனத்தை ஈர்த்துள்ளார். உர்பி மகிழ்ச்சியுடன் சன்னி லியோனை கட்டிப்பிடித்து கேமராவுக்கு போஸ் கொடுத்தார்.