நடிகை பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. தற்போது நடிகை பாவனாவும் கோல்டன் விசா பெற்றுள்ளார்.;

Update:2022-09-21 13:06 IST

துபாய்:

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

தமிழ் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், நடிகைகள் திரிஷா, மீனா, ஆண்ட்ரியா ஆகியோர் ஏற்கனவே கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் நடிகைகள் அமலாபால், காஜல் அகர்வால், ஊர்வசி ரவுடாலா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகை பாவனாவும் கோல்டன் விசா பெற்றுள்ளார். அவர் கோல்டன் விசா பெற்ற புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பாவனா தமிழில் தீபாவளி, ஆர்யா, வெயில், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்