ரீ-ரிலீசில் அதிக வசூல் செய்த படமான 'தும்பாட்' - 'கில்லி' சாதனை முறியடிப்பு?
தும்பாட் படம் திரையரங்குகளில் வெளியானபோது ரூ.13 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.;
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பாலிவுட் பேன்டஸி ஹாரர் திரைப்படம் தும்பாட். 'பேராசை பெருநஷ்டம்' என்கிற நீதிமொழியை மையப்படுத்தி ஹாரர் பேன்டஸி படமாக இதை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் ரஹி அணில் பர்வே.
இத்திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் கடந்த 13-ம் தேதி ரீ-ரிலீசானது. இதனை திரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இப்படம் வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ளநிலையில், ரூ.27 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் தும்பாட் படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் படமாக மாறியுள்ளது. இதற்கு முன்பு நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் வெளியான 'கில்லி' சமீபத்தில் ரீ-ரிலீசாகி சுமார் ரூ.26 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப்படைத்திருந்தது.
தற்போது இந்த சாதனையை தும்பாட் முறியடித்துள்ளதாக தெரிகிறது. தும்பாட் படம் திரையரங்குகளில் வெளியானபோது ரூ.13 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.