2 வேடங்களில் திரிஷா - ஆர்வத்தை தூண்டிய 'விஸ்வம்பரா'

முன்னதாக, 2018-ல் வெளியான ‘மோகினி’ படத்தில் திரிஷா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.;

Update:2024-03-13 18:19 IST

நடிகை திரிஷா, அஜித்தின் 'விடாமுயற்சி', கமலின் 'தக் லைப்' படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இந்நிலையில், அவர் சிரஞ்சீவி ஜோடியாக 'விஸ்வம்பரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 18 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர்.

பேன்டஸி திரில்லர் பாணியில் உருவாகும் 'விஸ்வம்பரா' படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கியத்துவம் கொண்ட இரண்டு வேடங்களில் திரிஷா நடிக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும் சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத், சிரஞ்சீவிக்கு சகோதரிகளாகவும் நடிக்கின்றனர். இப்படம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

முன்னதாக, 2018-ல் வெளியான 'மோகினி' படத்தில் திரிஷா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். மேலும், கடைசியாக சிரஞ்சீவி ஜோடியாக 2006ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'ஸ்டாலின்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்