நானி, நஸ்ரியா நடித்துள்ள 'அடடே சுந்தரா' படத்தின் டிரைலர் வெளியீடு..!
நானி மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள 'அடடே சுந்தரா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.;
நடிகை நஸ்ரியா, 8 வருடங்களுக்கு பிறகு, தெலுங்கு முன்னணி நடிகர் நானியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்துக்கு 'அடடே சுந்தரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நரேஷ், ரோகினி, நதியா, என்.அழகன் பெருமாள், ஹர்ஷவர்தன், ராகுல் ராமகிருஷ்ணா, ஹரிகா, நோமினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. அடடே சுந்தரா திரைப்படத்தை இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விவேக் சாகர் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இருவேறு மதங்களைச் சேர்ந்த நானியும் நஸ்ரியாவும் காதலிப்பது போன்று படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.