4 இயக்குனர்கள் இயக்கியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி படத்தின் டிரைலர் வெளியானது..!

4 இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Update: 2022-07-20 14:58 GMT

சென்னை,

இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் 'விக்டிம்'. இந்த படத்தை பிளாக் டிக்கெட் புரொடக்‌சன்ஸ் மற்றும் ஆக்சஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் அமலாபால், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பிரசன்னா, தம்பி ராமையா, கலையரசன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த ஆந்தாலஜி படத்தில் எம்.ராஜேஷ், 'மிரேஜ்' என்ற கதையையும் சிம்பு தேவன் 'கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்' என்ற கதையையும் பா.ரஞ்சித், 'தம்மம்' என்ற கதையையும் வெங்கட்பிரபு 'கன்ஃபெஷன்' என்ற கதையையும் இயக்கியுள்ளனர்.

ஒவ்வொரு கதையையும் இயக்குனர்கள் தங்களுக்கே உரிய பாணியில் இயக்கியுள்ளனர். விக்டிம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்