இந்தியில் பேசி அதிரவைத்த டாம் குரூஸ்

Update:2023-07-11 09:01 IST

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். இவர் பைக் சாகசங்கள், ஓடும் ரயில் மீது அதிரடியாக சண்டையிடுதல், விமானத்தில் இருந்து குதித்து சண்டை போடுவது என்று ஆக்ஷன் பிரியர்களை ஆச்சரியப்படுத்தி உலகம் முழுவதும் ரசிகர்களை சேர்த்துள்ளார்

இந்த நிலையில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு டாம்குரூஸ் அளித்த பேட்டியில் இந்தியில் பேசி அசத்தியுள்ளார். இதுவரை நீங்கள் செய்ய முடியாதது என்று ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்து டாம் குரூஸ் கூறும்போது, "இந்தி மொழியில் எனக்கு இருக்கும் திறமையை சோதித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். நான் இந்தியில் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் முயற்சி செய்கிறேன்" என்று கூறியபடி நமஸ்தே. ஆப் கைசே ஹோ என்று தனது ஸ்டைலில் இந்தியில் பேசி அதிர வைத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது. டாம்குரூஸ் அழகாக இந்தியில் பேசி எங்கள் இதயங்களில் இடம்பிடித்து விட்டார் என்று இந்தி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்