'நான் உயரமாக இருப்பதை விமர்சனம் செய்தனர்' - நடிகை சுருதி ஹாசன்
‘நான் உயரமாக இருப்பதை விமர்சனம் செய்தனர்' என நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.;
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிரபாசுடன் சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தனது உயரம் குறித்து சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ''நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் எனது உயரத்தை பார்த்து விமர்சனம் செய்தனர். நீ இவ்வளவு உயரமாக இருக்கிறாயே என்று எல்லோரும் வியப்பாக கேட்பார்கள். உனது உயரம் தான் உனக்கு மைனஸ் என்று கூட சொன்னார்கள். எனக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனென்றால் சினிமா துறையில் உயரமாக இருக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால் அதன்பிறகு ஒரு கட்டத்தில் உயரம் என்பது ஒரு பிரச்சினையே அல்ல என்று எனக்கு தெரிந்து விட்டது. இன்னும் சொல்ல போனால் எனக்கு உயரம்தான் 'பிளஸ் பாயிண்ட்' ஆகிவிட்டது. மகேஷ்பாபு, பிரபாஸ் போன்ற ஹீரோக்கள் ஜோடியாக நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்ததற்கு காரணமே எனது உயரம் தான். ஆனால் எனக்குள்ளும் சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை சரி செய்துகொள்ள அப்போதைக்கு அப்போது முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்'' என்றார்.