எனது வளர்ச்சிக்கு அவர்கள்தான் காரணம்: நடிகர் தனுஷ்

ஜூனியர் என்.டிஆருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளது என்று நடிகர் தனுஷ் கூறினார்.

Update: 2024-07-23 00:56 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் 2017-ல் பா. பாண்டி என்ற படத்தை டைரக்டு செய்து இருந்தார். தற்போது மீண்டும் ராயன் என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். இதில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடிகர் தனுஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சரியான சமயத்தில் சரியான வாய்ப்புகள் வந்ததால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என் வளர்ச்சிக்கு காரணம் என் இயக்குனர்கள்தான். எனது தவறுகளை கூட அவர்கள் விரும்பினார்கள். மன்னித்தார்கள். என்னை உருவாக்கினார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தால் தான் எனக்கு இந்த வளர்ச்சி சாத்தியமானது. இயக்குனர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். அது ஒரு பொறுப்பும் கூட.

ராயன் படத்தை டைரக்டு செய்ததில் கொஞ்சம் பயமாக இருக்கிறது. தெலுங்கில் எனக்கு பிடித்த நடிகர் பவன் கல்யாண். எனக்கு ஜூனியர் என்.டிஆருடன் இணைந்து நடிக்க ஆர்வம் உள்ளது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்