1.5 கோடி பார்வைகளை கடந்த 'தி கோட்' படத்தின் டிரைலர்

'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-08-17 20:49 GMT

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'தி கோட்' படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த டிரைலரில் தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கி சண்டை, கார் சேசிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது போன்ற சாகச காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இள வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன.

2 நிமிடம் 51 வினாடிகள் நீளமுள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது. இந்த நிலையில் 'தி கோட்' படத்தின் டிரைலர் தற்போது யூடியூபில் 1.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்