விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியானது

"மழை பிடிக்காத மனிதன்" படத்தின் டீசர் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.;

Update: 2024-05-29 14:08 GMT

சென்னை,

ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டு உள்ளது.இந்த டீசர் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்