'ஜிகர்தண்டா 2' படத்தின் டீசர் இன்று வெளியாகிறது

‘ஜிகர்தண்டா 2’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-11 09:48 GMT

மதுரை,

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார். .

இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்