'பாட்டல் ராதா' படத்தின் டீசர் நாளை வெளியாகிறது

'பாட்டல் ராதா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

Update: 2024-06-30 16:34 GMT

சென்னை,

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்படத்திற்கு 'பாட்டல் ராதா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது..இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இப்படம் மகிழ்ச்சி, மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டாராக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'பாட்டல் ராதா' படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்