துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் அறிமுக பாடலான 'சில்லா..சில்லா' பாடல் வருகிற 9-ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.