துணிவு படத்தின் அடுத்த பாடல் பெயர் கேங்ஸ்டா ? ஜிப்ரான் கொடுத்த புதிய அப்டேட்

ஜிப்ரான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

Update: 2022-12-21 17:00 GMT

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் 'சில்லா சில்லா' மற்றும் 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், கேங்ஸ்டா.. என்று பதிவிட்டுள்ளார். மேலும் இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ஷபிர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவை ரசிகர்கள் பலரும் அடுத்த பாடலின் அறிவிப்பாக இருக்கும் என்று இணையத்தில் பேசி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்