இவானா நடிக்கும் படத்தின் பெயரை திடீரென மாற்றிய படக்குழு... ரசிகர்கள் குழப்பம்...!

'காம்ப்ளக்ஸ்' படத்தின் பெயரை மாற்றி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Update: 2023-12-10 07:19 GMT

சென்னை,

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மந்த்ரா வீரபாண்டியன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் லவ் டுடே மற்றும் எல்.ஜி.எம். படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகை இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். உருவகேலியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் ஆடுகளம் நரேன். ஆராத்யா, சுதர்சன் கோவிந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக்ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் நெல்லையில் நடைபெற்றது.

இதற்கிடையே கடந்த மாதம் இந்த படத்திற்கு 'காம்ப்ளக்ஸ்' என பெயரிட்டுள்ளதாக படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. ஆனால் திடீரென இன்று வெளியான புதிய போஸ்டரில் படத்தின் பெயரை 'மதிமாறன்' என மாற்றி படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்