விஜய் சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' படத்தின் முதல் பாடல் வெளியானது
'மகாராஜா' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள 50-வது திரைப்படம் 'மகாராஜா'. இந்த படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் 'மகாராஜா' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தாயே தாயே' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மகாராஜா' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது.