துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் வெளியானது

'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.

Update: 2024-06-19 13:59 GMT

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அவரது நடிப்பில் வௌியான 'சீதா ராமம்' திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த கிங் ஆப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'.

இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'லக்கி பாஸ்கர்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'கொல்லாமல் கொல்லாதே' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ள இந்த பாடலை ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்