ஆண்ட்ரியா நடித்துள்ள 'கா' படத்தின் முதல் பாடல் வெளியானது

'கா' திரைப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2024-03-22 22:37 IST
ஆண்ட்ரியா நடித்துள்ள கா படத்தின் முதல் பாடல் வெளியானது

சென்னை,

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் 'கா'. இந்த படத்தில் ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்சன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி. பாபு இசையமைத்துள்ளார். 'கா' திரைப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'கா' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'காட்டுப்புலி உறு உறும்ம' என்ற பாடல் வெளியாகி உள்ளது. பால சீதாராமன் எழுதியுள்ள இந்த பாடலை கிடாக்குழி மாரியம்மாள் மற்றும் கோல்டு தேவராஜ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Full View

Tags:    

மேலும் செய்திகள்