படத்துக்காக கடும் விரதம் இருக்கும் நடிகை

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு, ‘திருக்குறள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது;

Update:2024-07-07 07:16 IST

சென்னை,

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு, 'திருக்குறள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் வள்ளுவராக கலைச்சோழனும், வாசுகியாக தனலட்சுமியும் நடிக்கிறார்கள். இப்படத்தை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்துக்காக தனலட்சுமி கடும் விரதம் இருந்து நடித்து வருகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உலக பொதுமறையாம் திருக்குறளை உருவாக்கி தந்த திருவள்ளுவர் பற்றிய கதை இது. வாசுகியாக நடிப்பது என் பாக்கியம். எனவே படப்பிடிப்பு தொடங்கியது முதலே விரதத்தையும், கடும் வழிபாட்டையும் மேற்கொண்டு வருகிறேன். அசைவ உணவுகள் உண்பது கிடையாது. படப்பிடிப்பு எப்போது முடியுமோ, அப்போது என் விரதத்தை முடிப்பேன்.

சினிமாவில் எந்த கதாபாத்திரத்தையும் நடித்து விடலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த மேதைகளின் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும். அந்த உண்மையை நான் காட்ட விரும்புகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்