கைது வதந்திக்கு நடிகை விளக்கம்
கைது வதந்திக்கு நடிகை இந்தி நடிகை உர்பி ஜாவேத் விளக்கம் அளித்துள்ளார்.;
இந்தி நடிகை உர்பி ஜாவேத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் அரை குறை உடையில் எல்லை மீறிய தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உர்பி ஜாவேத் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சக நடிகைளுடன் தகராறில் ஈடுபட்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு துபாயில் உர்பி ஜாவேத் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் தன்னை வீடியோ எடுத்ததாகவும் அங்கு பொது இடங்களில் வீடியோ எடுப்பது குற்றம் என்பதால் உர்பி ஜாவேத்தை கைது செய்து துபாய் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. இதற்கு உர்பி ஜாவேத் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, "என்னை துபாய் போலீசார் கைது செய்யவில்லை. நாங்கள் குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் படப்பிடிப்பை நடத்தியதால் போலீசார் விசாரணை நடத்தினர். நான் அணிந்த ஆடையிலும் பிரச்சினை இல்லை. தற்போது மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்'' என்றார்.