'பாசிட்டிவ் வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சார்' - அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன் டுவீட்..!

நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துள்ள சிவகார்த்திகேயன் அதுகுறித்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Update: 2022-11-23 16:11 GMT

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் "டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் 'பிரின்ஸ்' திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். 'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் சாரை சந்தித்தேன். உங்களுடைய பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்