தமிழில் விஜய் நடிப்பில் ஹிட்டான 2 படங்களின் தெலுங்கு வெர்ஷன் மறுவெளியீடு

பவன் கல்யாண் மற்றும் மகேஷ் பாபுவின் படங்கள் திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாக உள்ளது.;

Update:2022-12-27 18:18 IST
தமிழில் விஜய் நடிப்பில் ஹிட்டான 2 படங்களின் தெலுங்கு வெர்ஷன் மறுவெளியீடு

ஐதராபாத்,

நடிகர் விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, அவரது ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் 'கில்லி' திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த 'ஒக்கடு' படம் தற்போது திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. அதன்படி வரும் ஜனவரி 7-ந்தேதி 'ஒக்கடு' படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த 'குஷி' திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் பவன் கல்யாண், பூமிகா ஆகியோர் நடித்திருந்தார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படமும், வரும் 31-ந்தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இந்த இரண்டு படங்களின் புதிய டிரைலர்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்