சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த 'தக் லைப்' படக்குழு
‘தக் லைப்’ படம் ஜூன் 5-ந் தேதி திரைக்கு வரவுள்ளது.;

சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஜூன் 5-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் தனது முதல் ஆட்டத்தை இன்று ஆடவுள்ள சிஎஸ்கே அணிக்கு தக்லைப் படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் துவங்குவதற்கு முன் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.