பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மரணம்

‘நாளை நமதே' திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த நடிகர் சந்திரமோகன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2023-11-11 18:00 GMT

1966-ம் ஆண்டு வெளியான 'ரங்குல ரத்னம்' என்ற தெலுங்கு படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர், சந்திரமோகன். ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்த சந்திரமோகன், தமிழில் எம்.ஜி.ஆரின் 'நாளை நமதே' படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து அறிமுகம் ஆனார். 'நீயா' படத்தில் இச்சாதாரி பாம்பாகவும் நடித்தார். 'தெய்வ திருமணங்கள்', 'பாதுகாப்பு', 'சகுனி' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த சந்திரமோகன், ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள அவரது மகள்கள் வந்த பிறகு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. ஜெயசுதா, ஜெயப்பிரதா, மாதவி போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்துள்ள சந்திரமோகன், 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நந்தி விருது உள்பட ஆந்திர மாநில அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

சந்திரமோகன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்