ஆர்யா நடிக்கும் 'தி வில்லேஜ்' வெப் தொடரின் டீசர் வெளியீடு..!

'தி வில்லேஜ்' வெப் தொடர் வருகிற 24-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.;

Update: 2023-11-09 17:08 GMT

சென்னை,

நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'. இந்த வெப் தொடரில் திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'தி வில்லேஜ்' வெப் தொடர் வருகிற 24-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த வெப் தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள ஜாம்பி வகை திரைப்படம் போன்ற ஹாரர் காட்சிகள் தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்