'ஜப்பான்' திரைப்படம் - சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ஜப்பான் படத்திற்கு சிறப்புக் காட்சி திரையிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது;
சென்னை,
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'ஜப்பான்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் கடந்த 28-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் படத்திற்கு சிறப்புக் காட்சி திரையிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட வேண்டும்.முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.