"உங்களோடு பேசியது என் வாழ்நாள் நினைவாக இருக்கும்" - ரஜினி குறித்து சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவு

'டான்' பட வெற்றிக்காக ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Update: 2022-05-30 06:44 GMT

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டியதாக லைகா நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே டான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.



இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குறித்து பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், "இந்திய சினிமாவின் "டான்" உடன் நிற்கிறேன். ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து ஆசி பெற்றேன். ரஜினியோடு பேசிய அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும். உங்களது நேரத்திற்கும் டான் படம் குறித்த பாராட்டிற்கும் நன்றி தலைவா " என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்