வலிமை என்பது எண்ணத்தில் உள்ளது - நடிகை சமந்தா

சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது என்றும், நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது என நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.;

Update:2023-01-28 09:10 IST

மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்தி வெப் தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

மேலும் சில படங்களிலும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். அதோடு உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்த அவர் நோயில் சிக்கிய பிறகு ஜிம் பக்கம் போகவில்லை.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வெப் தொடரில் சண்டை காட்சிகள் உள்ளன என்றும், அதில் நடிக்கவே கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

உடற்பயிற்சி வீடியோவுடன் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், 'கஷ்டமான நேரத்தில் என்னை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்த பயிற்சியாளருக்கு நன்றி. கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறேன்.

சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது என்றும், நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது என்றும் என்னால் இப்போது கற்றுக்கொள்ள முடிந்துள்ளது'' என்று தத்துவமாக பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது. சமந்தா நடித்த 'சாகுந்தலம்' படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) திரைக்கு வருகிறது. 'குஷி' தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்