இமயமலையில் ஆன்மிக பயணம்: வியாசர் குகை, பத்ரிநாத் கோவிலில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்களிடம் சிரித்தபடி நின்று போஸ் கொடுக்கிறார்.;
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஒரு வாரம் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். தொடக்கத்தில் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவிடத்தில் வணங்கி பயணத்தை தொடங்கினார்.
தினமும் மலையில் உள்ள கோவில்களுக்கு படியேறி சென்று வழிபடுகிறார். குளிருக்காக கையில் உறைகளை அணிந்துள்ளார். கழுத்தில் மப்ளர் கட்டி உள்ளார். ஆன்மிக துறவிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். ரோட்டோரம் இருக்கும் சிறிய ஓட்டல்களில் பொங்கல் வாங்கி சாப்பிடுகிறார். டீ குடிக்கிறார். இரவு நேரங்களில் ஆசிரமங்களில் தங்குகிறார்.
பத்ரிநாத் கோவிலுக்கு சென்றும் வழிபட்டார். அங்கு பக்தர்கள் அதிகம் கூடி நின்றனர். அவர்கள் ரஜினியை பார்த்து ஜெயிலர் என்று குரல் எழுப்பினர். ரஜினியை பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்து சென்றனர். வியாசர் குகைக்கு சென்றும் தியானம் செய்தார்.
பாபாஜி குகைக்கும் செல்ல இருக்கிறார். ரஜினியை பார்க்க வழிநெடுகிலும் மக்கள் திரள்கிறார்கள். அவருடன் புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்களிடம் சிரித்தபடி நின்று போஸ் கொடுக்கிறார். வருகிற 17-ந் தேதி இமயமலை பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்ப ரஜினி திட்டமிட்டு உள்ளார்.