எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள முதல் வெப் தொடரின் அப்டேட்..!
நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'வதந்தி' வெப் தொடரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முதன் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை 'கொலைகாரன்' படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு 'வதந்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. மேலும் இந்த தொடரில் லைலா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த தொடரின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஜே.சூர்யா, "இது என்னை பற்றிய வதந்தி அல்ல" என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.