சினிமாவை விட்டு விலகுவது தற்காலிகம் தான்...நேரம் வரும்போது மீண்டும் வருவேன் - விக்ராந்த் மாஸ்ஸி

நான் வெளியிட்டிருந்த பதிவை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக நடிகர் விக்ராந்த் மாஸ்லி விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2024-12-03 21:39 IST

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ராந்த் மாஸ்ஸி. கடந்த 2017 இல் வெளியான 'எ டெத் இன் தி கஞ்ச்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், அதன்பின்னர் வெளியான, 'ஜின்னி வெட்ஸ் சன்னி', 'ஹசீன் தில்ருபா', 'லவ் ஹாஸ்டல்', 12-த் பெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'தி சபர்மதி ரிப்போர்ட்'. கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படம், பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றது.

இதனையடுத்து விக்ராந்த் மாஸ்ஸி, 'யார் ஜிக்ரி' மற்றும் 'ஆன்கோன் கி குஸ்தாகியான்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில், 'ஆன்கோன் கி குஸ்தாகியான்' படத்தை பிரபல இயக்குனர் சந்தோஷ் சிங் இயக்குகிறார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவில் மேலும் உயரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அதை விட்டு விலக போவதாக நேற்று அறிவித்தார். மேலும் அவர் 2025 ஆம் ஆண்டு அவரது கடைசி படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். 

இந்தநிலையில் தான் தற்காலிகமாக மட்டுமே ஓய்வு பெறுகிறேன் என்றும் தனது பதிவை பலர் தவறாக புரிந்துகொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு தெரிந்ததெல்லாம் நடிப்பது மட்டும்தான். இப்போது என்னிடம் உள்ள அனைத்தையும் அது எனக்கு கொடுத்தது. ஆனால் எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. எனது குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்குச் சிறிது ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.

இந்த நேரத்தில், நான் என்னை முழுமையாக உணர்கிறேன். நடிப்பிலிருந்து விலகுவது அல்லது ஓய்வு பெறுவது என எனது பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனக்கு நேரம் தேவை, ஆனால் நேரம் சரியாக இருக்கும் போது நான் திரும்பி வருவேன் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்