சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படம் - ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியீடு
'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் நிலையில், தமிழைப் போன்று தெலுங்கிலும் நடிகர் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.