முன்கூட்டியே திரைக்கு வருகிறது சிவகார்த்திகேயனின் "மாவீரன்" திரைப்படம்- படக்குழு அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மாவீரன் திரைப்படம் முன்கூட்டியே திரைக்கு வரவுள்ளது.;

Update:2023-05-05 18:14 IST

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரிதா, சுனில், இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவீரன் படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகும் என புதிய தகவலை வீடியோவுடன் படக்குழு  வெளியிட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்