'சைரன்' பட டைரக்டர் காதல் திருமணம்... நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
‘சைரன்’ பட இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் - ரம்யா திருமணம் உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. அவரது திருமணத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
முதல் படத்தை இயக்கிவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற முடிவோடு இருந்த அந்தோணி பாக்யராஜ் சைரன் படத்தை முடித்த நிலையில், தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். திருமணம் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
'இரும்புத்திரை', 'விஸ்வாசம்' படங்களில் ரைட்டராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அந்தோணி பாக்யராஜ். பல படங்களில் இவர்கள் பணி புரிந்தாலும், இவருக்கான அங்கீகாரம் 'விஸ்வாசம்' படத்திற்கு பிறகே கிடைக்கத் துவங்கியது. 'சைரன்' படம் ரசிகர்களிடையே பெரியளவில் கவனம் ஈர்க்காவிட்டாலும், தயாரிப்பு தரப்பினருக்கு லாபம் கொடுத்த படமாகவும், வித்தியாசமான கதையாலும் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்திருந்த இயக்குநர் அந்தோனி பாக்யராஜ் தனது காதலியை இருவீட்டார் சம்மதத்துடன் கரம் பிடித்தார். அவரது திருமணத்தில் ஜெயம் ரவி, சமுத்திரகனி, சிறுத்தை சிவா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.