சிம்புவின் 'பத்து தல' படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
ந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.;
சென்னை,
சிம்பு தற்போது 'பத்து தல', திரைப்படத்தில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Are you ready to celebrate this #NewYear2023 with #PathuThala?
— Studio Green (@StudioGreen2) December 30, 2022
Yeah! We are ready with release date announcement tomorrow at 11 AM✨
Get ready folks #Atman #SilambarasanTR #AGR@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik pic.twitter.com/Vd5rJH4W22