படக்காட்சிகள் கசிந்ததால் அதிர்ச்சி... விஜய் படப்பிடிப்பில் செல்போனுக்கு தடை

லியோ படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் யாரும் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-02-15 02:50 GMT

'வாரிசு' படத்துக்கு பிறகு விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி உள்ளது.

நாயகியாக திரிஷா நடிக்கிறார். அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் லியோ படப்பிடிப்பில் விஜய் நடித்த காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில், விஜய் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் காரில் இருந்து இறங்கி வருகிறார். சிலருடன் பேசுகிறார்.

இந்த வீடியோ காட்சி வலைத்தளத்தில் வைரலானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லியோ படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டால் அவை உடனடியாக நீக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் யாரும் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.

படப்பிடிப்பு அரங்கில் கூடுதல் பாதுகாப்பு போட்டு உள்ளே வருபவர்களை செல்போன் மற்றும் கேமரா ஏதேனும் வைத்து உள்ளார்களா என்று பரிசோதித்த பிறகே அனுமதிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்