காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஷில்பா ஷெட்டி - புகைப்படம் வைரல்

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு நடிகை ஷில்பா ஷெட்டி சென்றார்.;

Update:2024-05-07 23:46 IST

image courtecy:instagram@theshilpashetty

சென்னை,

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் பெரும்பாலும் இந்தி மொழி திரைப்படங்களிலையே நடிப்பவர். இந்தி மொழியை தவிர தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அவ்வப்போது நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு நடிகை ஷில்பா ஷெட்டி சென்றுள்ளார். அங்கு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் ரூ.98 கோடியை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்