பிரபல பாலிவுட் நடிகை மீது கிரிமினல் வழக்குப்பதிவு

ஷில்பா ஷெட்டி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2024-06-15 07:39 IST

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் 'குஷி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஷில்பா ஷெட்டி மும்பையில் நிறைய தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.134 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆபாச படம் தயாரித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த புகாரில் ராஜ்குந்த்ரா கைதான சம்பவம் பரபரப்பானது. பிட்காயின் மோசடி வழக்கிலும் சிக்கி உள்ளார்.

இந்த நிலையில் தங்க நகை திட்டம் மூலம் ஷில்பா ஷெட்டியும், ராஜ்குந்த்ராவும் தன்னை மோசடி செய்துவிட்டதாக வியாபாரி ஒருவர் மும்பை கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அது சம்பந்தமான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதையடுத்து ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்