நடிகர் ஷாருக்கான், நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு..!!

நடிகர் ஷாருக்கான், நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-05 11:50 GMT

கோப்புப்படம்

மும்பை,

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மறுபிரவேசப் படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல், ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி நிடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் நடிகை கத்ரீனா கைப்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனிடையே திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட 55 பிரபல நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான விருந்தில் பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான், கத்ரீனா கைப், கியாரா அத்வானி, ஜான்வி கபூர், மலைகா அரோரா மற்றும் கரீனா கபூர் கான் போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கரண் ஜோஹரின் பிரமாண்ட விருந்தில் விருந்தினர்களாக வந்த 50 முதல் 55 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே கொரோனா பரவலின் திடீர் அதிகரிப்பு காரணமாக, திரைப்பட ஸ்டுடியோக்களில் கூட்டமாக இருப்பது மற்றும் அதிக நபர்களுக்கான விருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்