நந்தன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்ற பிரபல நிறுவனம்!

சசிகுமார் நடித்துள்ள நந்தன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டெலிவிஷன் நிறுவனம் பெற்றுள்ளது.

Update: 2024-09-10 12:58 GMT

சென்னை,

'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 'அயோத்தி' வெற்றிப்படமாக அமைந்ததுடன் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

'கருடன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு வெளியாக உள்ளது. இந்த படத்தினை 'உடன்பிறப்பே' என்ற படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 'நந்தன்' திரைப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில், நந்தன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டெலிவிஷன் நிறுவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்