தேர்தலில் மனைவி வெற்றிபெற வேண்டி அங்கபிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா வெற்றிபெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்துள்ளார்.;

Update:2024-06-03 10:33 IST
Sarathkumar prayed for Radhikas victory in the elections

விருதுநகர்,

நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார். தற்போது, நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், தேர்தலில் மனைவி ராதிகா வெற்றிபெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்துள்ளார். விருதுநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில், பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வர வேண்டும் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்துள்ளார். அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்