சந்தானம் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Update: 2023-01-11 17:42 GMT

சென்னை,

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதை சந்தானம் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 'கிக்' படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை 6.3 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்