சமுத்திரக்கனி நடித்துள்ள 'தலைக்கூத்தல்' படத்தின் அப்பா-மகன் உறவு குறித்த பாடல் வெளியானது

சமுத்திரக்கனி நடித்துள்ள 'தலைக்கூத்தல்' படத்தின் உச்சத்துல வெண்ணிலவு என்ற பாடல் வெளியாகி உள்ளது.;

Update:2023-01-21 18:19 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டேனி சார்லஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் 'உச்சத்துல வெண்ணிலவு' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார். இந்த பாடலை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தலைக் கூத்தல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்