இணையத்தில் வைரலான டீப் பேக் புகைப்படம்... பதிலடி கொடுத்த சமந்தா

நடிகை சமந்தாவின் டீப் பேக் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. இதற்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.;

Update:2024-05-07 16:28 IST

தமிழ் சினிமாவின் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக இணைந்து சமந்தா நடித்துள்ளார். நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

கடந்த மாதம் தனது பிறந்தநாளின் போது, தனது சொந்த தயாரிப்பில், தான் கம்பேக் கொடுக்கும் 'மா இண்டி பங்காரம்' படம் குறித்தும் அறிவித்து இருந்தார்.

மையோசிடிஸ் நோய்க்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா. இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் இணையத்தில் பகிர தவறுவதில்லை. சமந்தா தனது சிகிச்சை தொடர்பான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். உடல்வலியைக் குறைக்கும் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், டவல் மட்டும் கட்டி இருக்கிறார் சமந்தா. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது சில விஷமிகள் தகாத முறையில் எடிட் செய்து இணையத்தில் பரப்பி வந்தனர்.

இது சமந்தா ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, சமந்தாவின் டீம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அந்த டீப் பேக் புகைப்படத்தை பரப்பிய ஐடியை பிளாக் செய்து அந்தப் புகைப்படத்தையும் இணையத்தில் இருந்து நீக்கினர். 

இந்த சூழ்நிலையில், இதற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, தனது சமூகவலைதளப் பக்கத்தில் 'நீங்கள் உண்மையாக இருந்தால், உங்களைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை' எனக் கூறியிருக்கிறார் சமந்தா.

Tags:    

மேலும் செய்திகள்