சம்பள பிரச்சினையால் பிரபல நடிகர் படத்தை நிராகரித்த சமந்தா

சம்பள பிரச்சினையால் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் இருந்து சமந்தா விலகி விட்டார்.;

Update:2022-08-30 15:54 IST

 தமிழ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா அதிக சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன. தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகி உள்ள யசோதா சாகுந்தலம் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. குஷி என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க சமந்தாவை அணுகினர். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருந்த நிலையில் படத்தில் இருந்து சமந்தா விலகி விட்டார். 

சமந்தாவுக்கு படக்குழுவினர் ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்ததாகவும் ஆனால் அவர் தனக்கு ரூ.4 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் அதை கொடுக்க தயாரிப்பாளர் சம்மதிக்காததால் படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பதாக இருந்த அலியாபட்டும் விலகி விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்